Latestமலேசியா

கிள்ளானில் மனிதக் கடத்தலால் பாதிக்கப்பட்ட வங்காளதேசத்தைச் சேர்ந்த ஆறு பிரஜைகள் மீட்கப்பட்டனர்

கோலாலம்பூர், நவ 5 – கிள்ளான்,  klang sentralலில் நேற்று  குடிநுழைவுத்துறை மேற்கொண்ட  சோதனை நடவடிக்கையில்  மனிதக் கடத்தலால் பாதிக்கப்பட்ட  வங்காளதேசத்தைச் சேர்ந்த ஆறு பிரஜைகள் மீட்கப்பட்டனர். புத்ரா ஜெயா குடிநுழைவுத்துறை தலைமையகத்தின்  உளவு மற்றும் சிறப்பு நடவடிக்கை பிரிவு மேற்கொண்ட அந்த நடவடிக்கையில்  தங்குமிடத்தின் பராமரிப்பாளராக இருந்த   30  வயதுடைய வங்காளதேச ஆடவர் தப்பியோட முயன்றபோது கைது செய்யப்பட்டார்.  

சுற்றுப்பயணியாக வங்காளதேசிகளை இங்கு அழைத்துவரும் கும்பல் அவர்களுக்கான கடப்பிதழ், விசா, விமான டிக்கெட் உட்பட  அனைத்து  ஏற்பாடுகளையும் செய்து வந்ததாக குடிநுழைவுத்துறை  வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.  

நாட்டிற்குள் கொண்டு வரப்படும்  ஒவ்வொரு வங்காளதேசிக்கும் அக்கும்பல் தலா  15,000 ரிங்கிட்டையும்  தற்காலிக  பரிமாற்ற மைத்திலிருந்து   அவர்களை  வெளியேறுவதற்கு மேலும் 5,000 ரிங்கிட்டையும் வசூலித்து வந்துள்ளது. 

 வங்காளதேச கடப்பிதழ்களின் ஏழு நகல்கள், ஏழு விவேக கைபேசிகள்  ஆகியவற்றையும் குடிநுழைவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.  மீட்கப்பட்ட  18 முதல் 41 வயதுடைய ஆறு வங்காளதேசிகள்  மேல் நடவடிக்கைக்காக    மலாக்காவில்   Tanjung Kiling  தற்காலிக தடுப்பு முகாமிற்கு கொண்டுச் செல்லப்பட்டனர். அதே வேளையில் கைது செய்யப்பட்ட  அந்த பராமரிப்பாளர் மனிதக் கடத்தல் சட்டத்தின் கீழ் ஷா ஆலாம்  மத்திய லோக்காப்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!