
ஷா ஆலாம், நவம்பர்-11 – கிள்ளான், புக்கிட் திங்கியில் உள்ள எண்ணெய் நிலையமொன்றில் கடந்த வெள்ளிக் கிழமை சுட்டுக் கொல்லப்பட்ட ஆடவர், உண்மையில் SOSMA சட்டத்தின் கீழ் தேடப்பட்டு வந்தவராவார்.
34 வயது அந்த உள்ளூர் ஆடவர் பல்வேறு குற்றப் பதிவுகளையும் கொண்டவரென, சிலாங்கூர் போலீஸ் தலைவர் Shazeli Kahar தெரிவித்தார்.
இந்நிலையில் இறந்தவரின் இந்த பின்புலம் உட்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெறுவதாக அவர் சொன்னார்.
அவ்வாடவரின் மனைவி, குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகள் என இதுவரை 7 பேரின் வாக்குமூலங்கள் பதிவுச் செய்யப்பட்டுள்ளன என்றார் அவர்.
வெள்ளிக் கிழமை இரவு 11 மணியளவில் நிகழ்ந்த அச்சம்பவத்தில் எண்ணெய் நிலையத்தில் காரின் முன்பக்க இருக்கையில் அமர்ந்திருந்த அவ்வாடவர், மர்ம நபரால் சரமாரியாக சுடப்பட்டார்.
அவ்வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.



