
அஹமதாபாத், ஜூலை-1 – இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற சமய ஊர்வலத்தில் பங்கேற்ற யானைகள் திடீரென மிரண்டு பக்தர்களைத் தாக்கியதால், அவ்விடமே கலவரமானது.
வெள்ளிக்கிழமை நிகழ்ந்த இச்சம்பவத்தில், வாத்திய இசை சத்தம் மற்றும் பக்தர்களின் கூச்சல்களால் முதலில் ஓர் ஆண் யானை மிரண்டு, கூட்டத்தை மோதியது.
இதனால் மேலுமிரு யானைகள் பதற்றமடைந்து கூட்டத்தை நோக்கி ஓடியதால், நிலைமைக் கட்டுப்பாட்டை மீறியது.
இதில் ஒரு பெண் போலீஸ்காரர் உள்ளிட்ட இருவர் காயமடைந்தனர்.
யானைகளை ஆசுவாசப்படுத்த உடனடியாக வனவிலங்குத் துறை வரவழைக்கப்பட்டது.
அச்சம்பவம் குறித்து விசாரணைத் தொடங்கியுள்ள நிலையில், இது போன்ற ஊர்வலங்களில் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்தவும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது