மாச்சாங், அக்டோபர்-17, கிளந்தான், மாச்சாங்கில் குப்பைத் தொட்டிக்கு வெளியே குப்பைகளை வீசிய நபர்கள், CCTV கேமரா வாயிலாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
குப்பைகளைக் கொட்டுமிடங்கள் வரை சென்று விட்டு, குப்பைகளைக் குப்பைத் தொட்டிக்குள் வீசாமல், வெளியே போட்டு விட்டு வரும் செயல் அண்மைய காலமாக அதிகரித்து வருகிறது.
சோம்பேறித்தனமாக நடந்துகொள்ளும் அத்தகையோரை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுப்பதற்காகவே CCTV கேமராக்களை மாச்சாங் மாவட்ட மன்றம் (MDM) பொருத்தியுள்ளது.
சம்பந்தப்பட்டவர்களுக்கு 1,000 ரிங்கிட் வரை அபராதம் விதிக்கப்படலாம் என ஊராட்சி, வீடமைப்பு, சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் துறைகளுக்கான மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் ஹில்மி அப்துல்லா (Hilmi Abdullah) தெரிவித்தார்.