
ஜோகூர் பாரு, மார்ச் 10-மாசாய் , Plentonng கில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள குப்பைத் தொட்டியில் புதிதாகப் பிறந்த பெண் குழந்தை ஒன்று நேற்று காலையில் கண்டெடுக்கப்பட்டது.
காலை மணி 8.45 அளவில் அந்த குழந்தை கண்டுபிடிக்கப்பட்டது குறித்து தனது துறைக்கு தகவல் கிடைத்ததாக ஶ்ரீ ஆலம் மாவட்ட போலீஸ் தலைவர் உதவி கமிஷனர் முகமட் சொஹாய்மி இஷாக் ( Mohd Sohaimi Ishak ) தெரிவித்தார்.
பிளாஸ்டிக் பையில் சுற்றப்பட்ட நிலையில் குழந்தை இருந்ததை குடியிருப்பாளர்கள் கண்டுபிடித்தனர். அக்குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதை சுல்தான் இஸ்மாயில் மருத்துவமனையின் மருத்துவ அதிகாரி உறுதிப்படுத்தினார்.
ஒரு குழந்தையை வேண்டுமென்று கைவிடப்படும் தண்டனைச் சட்டத்தின் 317 ஆவது பிரிவின் கீழ் இது தொடர்பாக விசாரணை நடத்தப்படுகிறது . குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டால் ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என முகமட் சொஹாய்மி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.



