
குளுவாங், மார்ச்-28- ஜோகூர், குளுவாங்கில் நேற்றிரவு 5 வாகனங்களை உட்படுத்தி நிகழ்ந்த கோர விபத்தில் மூவர் உயிரிழந்தனர்.
தெற்கு நோக்கிச் செல்லும் PLUS நெடுஞ்சாலையின் 58.1-ஆவது கிலோ மீட்டரில் இரவு 11.48 மணிக்கு அவ்விபத்து நேர்ந்தது.
மேலும் சிலர் காயமடைந்த வேளை, மூவர் காயமின்றி உயிர் தப்பினர்.
MPV Honda Stepwagon, Toyota Camry, Proton X50, டிரேய்லர் உள்ளிட்ட வாகனங்கள் விபத்தில் சிக்கின.
அவற்றில் MPV-யும் டிரேய்லரும் தீப்பற்றிக் கொண்டன.
தீயணைப்புப் படையைச் சேர்ந்த 13 வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
காயமடைந்தவர்கள் குறித்த தகவல்கள் இன்னமும் விசாரணையில் இருப்பதால், சம்பவம் குறித்த முழு அறிக்கை பிறகு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது.