Latestமலேசியா

குளுவாங் ஸ்ரீ வேல் முருகன் ஆலயத்தில் நவம்பர் 29, 30 திகதிகளில் சமய மாநாடு 2025

குளுவாங், நவம்பர்-11,

ஜோகூர், குளுவாங் ஸ்ரீ வேல் முருகன் ஆலயம் முதன் முறையாக சமய மாநாடு 2025 எனும் நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது.

நவம்பர் 29 சனிக்கிழமை காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரையிலும், நவம்பர் 30 ஞாயிற்றுக் கிழமை காலை 8 மணி முதல் பிற்பகல் 4 மணி வரையிலும், இரு நாட்களுக்கு இது நடைபெறுகிறது.

மாநாட்டின் நோக்கம் குறித்து ஸ்ரீ வேல் முருகன் ஆலயத்தின் தலைவர் கணேசன் சுப்பையா வணக்கம் மலேசியாவிடம் விவரித்தார்.

-Ganesan interview-

இந்த சமய மாநாட்டில் முக்கிய உரைகள், சிறப்பு சொற்பொழிவுகள் மற்றும் சமய விவாதங்கள் இடம்பெறும்.

இம்மாநாட்டிற்கு தமிழகம், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த திருக்கயிலாய பரம்பரை ஸ்ரீ கந்தப்பரம்பரை சூரியனார் கோயில் ஆதீன ஸ்ரீ கார்யம் அருட்குருநாதர் தவத்திரு ஸ்ரீமத் சிவாக்கர தேசிக சுவாமிகள் சிறப்பு வருகைபுரிகிறார்.

அவருடன் ஆன்மீக அறிஞர் திருணா சிவ.அய்யாவு பவானி தியாகராஜன், பேராசிரியர் So. So. Me. சுந்தரம் ஆகியோரும் வருகிறார்கள்.

உள்ளூரிலிருந்து சிவஶ்ரீ அ.ப.முத்துகுமர சிவாச்சாரியார், மகேந்திர சுவாமிகள், திரு ஆர்திமூலம் உள்ளிட்டோர் சிறப்பு வருகைபுரிகின்றனர்.

இந்த 2 நாள் மாநாட்டை நிறைவுச் செய்யும் 600 பங்கேற்பாளர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.

இம்மாநாட்டிற்கான நுழைவு இலவசமாகும்; உணவு மற்றும் பரிசுப் பைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

எனவே இந்துபெருமக்கள் இதில் திரளாகக் கலந்துகொள்ள அழைக்கப்படுகிறார்கள்.

மேல் விவரங்களுக்கு திரையில் காணும் எண்களை தொடர்புகொள்ளலாம்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!