
குவாலா கிராய், மார்ச்-8 – கிளந்தான், குவாலா கிராய் சுல்தான் இஸ்மாயில் பெத்ரா மருத்துவமனை விடுதியின் குளியறையில், 29 வயது பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் நேற்று காலை உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.
காலை 9.55 மணியளவில் தகவல் கிடைத்ததும், போலீஸார் சம்பவ இடம் விரைந்தனர்.
தொடக்கக் கட்ட விசாரணையில் குற்ற அம்சங்கள் எதுவும் இல்லை என கண்டறியப்பட்டதால், இது திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளதாக குவாலா கிராய் போலீஸ் தலைவர் மஸ்லான் மாமாட் கூறினார்.
என்றாலும் உடல் சவப்பரிசோதனைக்காக தடயவியல் பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
பயிற்சி மருத்துவரின் திடீர் மரணம் மருத்துவமனை விடுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



