குவாலா சிலாங்கூர், செப்டம்பர்-10 – 5 வயது பெண் பிள்ளையை சித்ரவதை செய்த குற்றத்தை ஒப்புக் கொண்ட தாய்க்கும், அவரின் காதலருக்கும் குவாலா சிலாங்கூர் செஷன்ஸ் நீதிமன்றம் ஈராண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது.
சிறைத்தண்டனை முடிந்து வெளியானதும் இருவரும் ஈராண்டுகள் நன்னடத்தை கண்காணிப்பில் இருக்க வேண்டுமென்றும் நீதிபதி தீர்ப்பளித்தார்.
குழந்தைக்குக் காயமேற்படும் அளவுக்கு அடித்து, கிள்ளி, மிதித்ததோடு மட்டுமல்லாமல் உடலில் கொதிக்க கொதிக்க நீரை ஊற்றி கொடுமைப்படுத்தியாக இருவரும் குற்றம் சாட்டப்பட்டிருந்தனர்.
தனித்து வாழும் தாயான 32 வயது அப்பெண்ணுக்கு, அது ஒரே குழந்தையாகும்.
ஆகஸ்ட் 13-ஆம் தேதிக்கும் செப்டம்பர் 4-ம் தேதிக்கும் இடைபட்ட காலத்தில் குவாலா சிலாங்கூரில் உள்ள வீட்டில் வைத்து அக்குற்றத்தைப் புரிந்துள்ளனர்.