பெட்டாலிங் ஜெயா, டிசம்பர்-12 – பெட்டாலிங் ஜெயாவில், கோலாம்பூரை நோக்கிச் செல்லும் கூட்டரசு நெடுஞ்சாலையில் இன்று காலை கார் தீப்பிடித்துக் கொண்டதில், அதன் ஓட்டுநர் உடல் கருகி மாண்டார்.
காலை 6.20 மணிக்கு நிகழ்ந்த அச்சம்பவத்தில், அந்த Honda Accord கார் கட்டுப்பாட்டை இழந்து, தடம்புரண்டு, MRT தூணில் மோதி தீப்பிடித்துக் கொண்டது.
அதில் காரோட்டி உடல் முழுவதும் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
எனினும், அவரின் அடையாளங்கள் இன்னும் உறுதிச் செய்யப்படவில்லையென, பெட்டாலிங் ஜெயா போலீஸ் துணைத் தலைவர் Superintendan M Hussin Sollehuddin Zolkifly கூறினார்.
அச்சம்பவத்தை காரின் dashcam-மில் யாராவது பதிவுச் செய்திருந்தால், போலீசைத் தொடர்புக் கொண்டு விசாரணைக்கு உதவுமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.
இறந்தவரின் உடல் மலாயாப் பல்கலைக் கழக மருத்துவ மையத்தின் தடயவியல் மையத்திற்குக் கொண்டுச் செல்லப்பட்டுள்ளது.