Latestமலேசியா

கூலாய் அருகே பெரிய மோட்டார் சைக்கிள் சாலைத் தடுப்பை மோதியது; பின்னால் அமர்ந்திருந்த சிங்கப்பூர் பெண் மரணம்

கூலாய், டிசம்பர்-11, இரு சிங்கப்பூரர்கள் பயணம் செய்த உயர் சக்தி கொண்ட மோட்டார் சைக்கிள், ஜோகூர், கூலாய் அருகே வடக்குத் தெற்கு நெடுஞ்சாலையின் 49.5-வது கிலோ மீட்டரில் சாலைத் தடுப்பை மோதி விபத்துக்குள்ளானதில், பின்னால் அமர்ந்திருந்த 21 வயது பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தெற்கு நோக்கி பயணித்த போது அவர்களின் Kawasaki Ninja ZX-10 மோட்டார் சைக்கிள், நேற்று காலை 9.15 மணியளவில் விபத்துக்குள்ளானது.

தலையில் படுகாயமேற்பட்டு மரணமடைந்த அப்பெண்ணின் உடல் பின்னர் Temenggong Seri Maharaja Tun Ibrahim மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.

மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற 23 வயது ஆடவருக்கு காலில் கடுமையான காயங்கள் ஏற்பட்டு சிகிச்சைக்காக அவரும் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!