
பட்டர்வெர்த், மார்ச் 10 -‘கெங் அடிக் லாபு பெசார்’ என்று அழைக்கப்படும் ஒரு குற்றக் கும்பலைச் சேர்ந்தவர்களாக இருந்ததாக இரண்டு காதல் ஜோடிகள் உட்பட உட்பட எட்டு பேர் மீது இன்று பினாங்கு செஷன்ஸ் நீதிமன்றத்தில் சொஸ்மா சட்டத்தின் குழ் குற்றஞ்சாட்டப்பட்டது.
அவர்கள் அனைவரும் 2025ஆம் ஆண்டு மார்ச் 25ஆம்தேதி முதல் அக்டோபர் 16 ஆம்தேதிவரை பினாங்கு செபராங் பெராய் உத்தாரா மாவட்டத்தில் உள்ள Vista Perdana, Jalan Kampung Gajah ஆகிய இடங்களில் உள்ள ஒரு இல்லத்தில் குற்றக் கும்பலின் உறுப்பினர்களாக இருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டனர்.
செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி ரொஸ்லான் ஹமிட் முன்னிலையில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது. அவர்கள் அனைவரிடமிருந்தும் எந்த வாக்குமூலமும் பதிவு செயயப்பட்வில்லை.
எனினும் குற்றச்சாட்டு புரிந்துகொண்டதற்கு அடையாளமாக அவர்கள் தலையசைத்தனர். உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட 2012 ஆம் ஆண்டின் சொஸ்மா எனப்படும் பாதுகாப்பு குற்றங்கள் சிறப்பு நடவடிக்கை சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டதால் அவர்கள் அனைவருக்கும் ஜாமீன் அனுமதிக்கப்படவில்லை.
இவர்கள் மீதான வழக்கு எதிர்வரும் மே மாதம் 4 ஆம்தேதி பினாங்கு உயர்நீதிமன்றத்தில் நடைபெறும் என நீதிபதி ரோஸ்லான் ஹமிட் தெரிவித்தார். நேற்று, பினாங்கில் திருட்டு கும்பலை முறியடித்த பின்னர், குற்றவியல் குழுவின் அந்த உறுப்பினர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீஸ்துறை விசாரணை ஆவணங்களை தீவிர குற்றப் பிரிவு அலுவலகம், சட்டட்துறை தலைவர் அலுவலகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குனர் டத்தோ எம் குமார், பினாங்கு போலீஸ் தலைமையத்தின் குற்றப் புலனாய்வுத் துறையுடன் இணைந்து பினாங்கில் வீடு புகுந்து திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவியல் கும்பலை கைது செய்வதற்கு நடவடிக்கை மேற்கொண்டதாக கூறப்பட்டது.



