Latestமலேசியா

கெடாவில் தான் வெட்டிய மரக்கிளையே தன் காலில் விழுந்து ஆடவர் காயம்

சீக், செப்டம்பர் -9 – கெடா, சீக்கில் மரத்திலேறி கிளைகளை வெட்டிக் கொண்டிருந்த ஆடவர், தான் வெட்டியக் கிளையே தன் காலில் விழுந்து காயமுற்றார்.

ஸ்ரீ டூசுன் தேசியப் பள்ளியின் ஆசிரியர் குடியிருப்புக்குப் பின்னால் ஞாயிற்றுக்கிழமை மாலை அச்சம்பவம் நிகழ்ந்தது.

0.25 மீட்டர் நீளமுள்ள மரக்கிளை காலில் விழுந்து அவர் வலியால் துடித்ததைக் கண்ட பள்ளிப் பணியாளர் தீயணைப்பு மீட்புத் துறைக்கு தகவல் கொடுத்தார்.

கனமழைக்கு மத்தியில் 4.57 மீட்டர் உயரத்தில் மரக்கிளையில் சிக்கிக் கொண்டவரை, ஏணி வைத்தேறி சங்கிலி இரம்பத்தின் உதவியுடன் 10 நிமிடங்களில் தீயணைப்பு மீட்புக் குழுவினர் கீழே கொண்டு வந்தனர்.

பாதிக்கப்பட்ட 35 வயது ஆடவர் சிகிச்சைக்காக சீக் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.

மரக்கிளைகளை வெட்டும் போது, அதற்குரியக் கருவிகளைப் பயன்படுத்த வேண்டுமென்பதோடு, கவனமாகவும் இருக்க வேண்டுமென தீயணைப்பு மீட்புத் துறை பொது மக்களை அறிவுறுத்தியது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!