Latestமலேசியா

கெட்டி மேளம் 3.0 திருமணக் கண்காட்சி: உங்கள் அனைத்து தேவைகளுக்கான ஒரே இடம்

ஜோகூர், ஜனவரி 4 – திருமணத் தேவைகளை ஒரே இடத்தில் நிறைவேற்றும் கெட்டி மேளம் 3.0 திருமண எக்ஸ்போ, ஜனவரி 9ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை ஜோகூரில், Moxsha Hall Permas Jaya-வில் வெகு விமரிசையாக நடைபெறவுள்ளது.

இந்த எக்ஸ்போவில், திருமண ஆடை, நகைகள், திருமண மண்டபங்கள், புகைப்படக் கலைஞர்கள், கேட்டரிங் சேவைகள் என, 30-க்கும் மேற்பட்ட விற்பனையாளர்கள் உங்கள் திருமணத்திற்கான ஒவ்வொரு தேவைகளையும் ஒரே இடத்தில் மகா தள்ளுபடிகளில் வழங்க விற்கின்றனர்.

அதுமட்டுமா?, இக்கண்காட்சியில் அதிர்ஷ்ட குலுக்கலும் இடம்பெறவிருக்கிறது. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு ஹனிமூன் பயணம், தங்க நாணயங்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் வழங்கப்படும்.

மேலும், கெட்டி மேளம் 3.0 குறித்து தனித்துவமான ரீல்களைப் பதிவு செய்து சமூக ஊடகங்களில் பகிர்ந்து, 1,000 ரிங்கிட் பரிசுத் தொகையை வெல்லும் வாய்ப்பும் காத்திருக்கிறது!

இக்கண்காட்சியில் பிரபல பாடகர் சந்தேஷின் இசை நிகழ்ச்சி, குழந்தைகளுக்கான பொங்கல் பானை வரையும் ஓவியப் போட்டி, fashion show, dessert baking பயிற்சி, சேலை அழகு ராணி போட்டியும் ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளது.

இவற்றைத் தவிர்த்து சிறப்பம்சமாக, சுவாரஸ்யமான காதல் கதை கொண்ட ஜோடி ஒன்றிற்கு முற்றிலும் ஸ்பான்சர் (sponsor) முறையிலான ஆடம்பர திருமண ஏற்பாடுகள் வழங்கப்படவுள்ளன.

இதற்காக உங்கள் காதல் கதைகளை நேரடியாக பதிவு செய்ய இக்காண்காட்சி நடைபெறும் நாள்களில், walk-in-booth சேவையும் ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளது.

ஆக, இந்த அரிய வாய்ப்பை தவற விடாதீர்கள்! உங்கள் வாழ்க்கையின் முக்கிய நாளை தரமாகவும், தள்ளுபடிகளுடன் மகிழ்ச்சியாகக் கொண்டாட கெட்டி மேளம் 3.0, உங்களை அன்புடன் அழைக்கிறது!

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!