
கோலாலம்பூர், ஜன 16 – கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையமான KLIA-வில் கார் நிறுத்தியதற்கான கட்டணம் 2,000 ரிங்கிட்டிற்கு அதிகமா இருந்தது குறித்து டிக்டோக்கில் காணொளி வெளியானதைத் தொடர்ந்து நெட்டிசன்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
13 நாட்கள் தனது காரை KLIAவில் நிறுத்திய பின்னர் அங்கிருந்து வெளியேறியபோது கார் நிறுத்துமிட kioskகில் அதற்கான கட்டணம் 2,084 ரிங்கிட்டை காட்டியபோது தாம் அதிர்ந்துவிட்டதாக @yaya.tasha எனும் டிக்டோக் பயணர் காணொளி வெளியிட்டுள்ளார்.
அந்த கட்டண விவரங்களை தனது கைதொலைபேசியில் அவர் பெரிதாக்கி பார்த்தபின்னர் அதிர்ச்சியடைந்து பேசியிருப்பதையும் அந்த காணொளியில் பார்க்க முடிகிறது.
மற்ற இடங்களைவிட விமான நிலையங்களில் கார் நிறுத்தும் கட்டணம் அதிகமாக இருந்தாலும் KLIAவின் கட்டணம் அளவுக்கு மீறியதாக இருப்பதாக பலர் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.
KLIAவில் முன்பு நாள் ஒன்று கார் நிறுத்தக் கட்டணம் 45 ரிங்கிட்டாகத்தான் இருந்தது. இப்போது இந்த விலை அதிகரித்துவிட்டதா எனவும், பொதுவாகவே ஒரு நாளைக்கு 100 ரிங்கிட் விதித்தால் கூட 13 நாட்களுக்கு சராசரி 1,300 ரிங்கிட்தானே வரும்,
அப்படியினால் நாள் ஒன்றுக்கு KLIAவில் கார் நிறுத்தக் கட்டணம் எவ்வளவுதான் என மற்றொரு வலைத்தளவாசியும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
2,084 ரிங்கிட் கட்டணம் விதிப்பது எந்த வகையில் நியாயம் என சிலர் தங்களது கோபத்தை வெளிப்படுத்தியுள்ள நிலையில் இன்னும் சிலர் கிரேப்பில் விமான நிலையத்திற்கு சென்று வந்தால்கூட 200 ரிங்கிட்தான் செலவாகும், அப்படி சென்றிருந்தால்கூட பணத்தை மிச்சப்படுத்தியிருக்கலாம் என கிண்டலாக கூறியுள்ளனர்.
வைரலான இந்த காணொளி காணொள் இதுவரை 444,500 பேர் பார்த்துள்ளனர்.