
கோலாலம்பூர், ஜனவரி-17 – இராணுவம் மற்றும் போலீஸ் துறையுடன் தொடர்புடைய கொள்முதல் நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இந்த அதிரடி முடிவை அறிவித்துள்ளார்.
பாதுகாப்பு மற்றும் சட்ட அமுலாக்க அமைப்புகளில் மேற்கொள்ளப்படும் கொள்முதல் நடவடிக்கைகள் முழுமையாக மறுபரிசீலனை செய்யப்படும் என்றும், வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மையை அரசாங்கம் எந்த நிலையிலும் சமரசம் செய்யாது என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த உத்தரவு, நடைமுறையில் உள்ள மற்றும் திட்டமிடப்பட்ட இராணுவம் மற்றும் போலீஸ் கொள்முதல் ஒப்பந்தங்களையும் உள்ளடக்கியதாகும்.
பிரதமரின் உத்தரவை புக்கிட் அமான் முழுமையாக பின்பற்றுவதாக, தேசியப் போலீஸ் படைத் தலைவர் டத்தோ ஸ்ரீ Mohd Khalid Ismail.
தெரிவித்துள்ளார்.
உரிய அனைத்தும் தொழில்முறை அடிப்படையிலும் அரசாங்கக் கொள்கைகளுக்கு ஏற்பவும் மேற்கொள்ளப்படும் என அவர் கூறினார்.
ஆயுதப் படை கொள்முதல்களில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் ஊழல் குறித்து
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC மேற்கொண்டு வரும் விசாரணைகள் தொடரும் நிலையில் அன்வாரின் உத்தரவு வந்துள்ளது.
இது, உயர்மதிப்புடைய பாதுகாப்பு ஒப்பந்தங்களில் பொறுப்புணர்வும் பொது மக்கள் நம்பிக்கையும் மீட்கப்பட வேண்டும் என்ற மடானி அரசின் நோக்கத்தை வெளிப்படுத்துகிறது.



