Latestமலேசியா

கொள்ளை கும்பலில் ஈடுபட்டதாக 3 அரசு ஊழியர்கள் கைது

கோம்பாக், மார்ச்-8 – கொள்ளை கும்பலில் ஈடுபட்டதாகக் கூறி சிலாங்கூர் கோம்பாக்கில் 3 அரசு ஊழியர்கள் போலீஸாரால் கைதுச் செய்யப்பட்டுள்ளனர்.

பிப்ரவரி 27-ஆம் தேதி நிகழ்ந்த ஒரு கொள்ளைச் சம்பவம் குறித்து பெறப்பட்ட புகார் தொடர்பில், மார்ச் 2-ஆம் தேதி அதிரடிச் சோதனைகள் தொடங்கின.

அவற்றில் வெவ்வேறு இடங்களில் மொத்தமாக 6 உள்ளூர் ஆடவர்கள் கைதாகினர்; அவர்களில் 2 மூத்த அதிகாரிகள் உள்ளிட்ட 3 அரசுப் பணியாளர்கள் அடங்குவர் என சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ Shazeli Kahar கூறினார்.

மற்ற மூவரும் பொது மக்கள் என்றும் அவர்களில் ஒருவனுக்கு 20 கிரிமினல் குற்றப்பதிவுகள் இருப்பதாகவும் Shazeli சொன்னார்.

அறுவருமே விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

‘போலீஸ்’ என போலியாக அடையாளம் குறிக்கப்பட்ட ஓர் ஆடம்பர கார் உள்ளிட்ட வாகனங்கள், சுமார் 1,500 ரிங்கிட் ரொக்கம் உள்ளிட்டவையும் அக்கும்பலிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டன.

இன்னும் வெளியிலிருக்கும் மேலும் சந்தேக நபர்களுக்கு போலீஸ் வலைவீசியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!