Latestமலேசியா

கோத்தா பாருவில் 420 கிலோ எடையுள்ள நபர் மரணம்; தீயணைப்பு துறையின் உதவியோடு உடல் அடக்கம்

கோத்தா பாரு, டிச 16 – 420 கிலோ எடையுள்ள Sheikh Mohd Ali Omar என்பவர்
இறந்ததைத் தொடர்ந்து அவரது உடல் தீயணைப்பு வீரர்களின் உதவியோடு
கோத்தா பாரு Pasir Hor-ரில் Kampung Jaya இஸ்லாமிய மையத்துக் கொல்லையில் நேற்றிரவு மணி 11.30 அளவில் அடக்கம் செய்யப்பட்டது. அந்த வட்டாரத்தைச் சேர்ந்த கிராமவாசிகளுடன், தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவைச் சேர்ந்த 20 பேர் உதவியோடு அந்த ஆடவரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

Sheikh Mohd Ali-யின் உடலை Kampung Pasir Hor-ரிலுள்ள மையத்துக் கொல்லைக்கு கொண்டுச் செல்வதற்கு 5 டன் லோரி பயன்படுத்தப்பட்டதாக தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையின் துணை இயக்குநர் முகமட் வில்டன் அஸாரி ( Mohd Wildan Azhari) தெரிவித்தார். அதன்பிறகு சொந்தமாக செய்யப்பட்ட இழுவை வண்டியை பயன்படுத்தி 20 தீயணைப்பு வீரர்கள் ஷேய்க் முகமட் அலியின் உடலை அடக்கம் செய்யும் இடத்திற்கு எடுத்துச் சென்றனர். இதற்கு முன்னதாக ஷேய்க் முகமட் அலியின் உடல் எடையை உறுதிப்படுத்தும் கடிதம் இல்லாத காரணத்தினால் , அவரது இறுதி சடங்கை மேற்கொள்வதில் அவரது குடும்பத்தினர் சிரமத்தை எதிர்நோக்கினர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!