கோப்பேங், செப்டம்பர் 11 – கோப்பேங், வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையில், தலைக்கவசம் அணியாமல் ஸ்கூட்டரில் ஆபத்தான முறையில் பயணித்த ஆடவரை காவல்துறை தேடி வருகிறது.
நேற்று முகநூலில் வைரலாகப் பகிரப்பட்ட 46 வினாடி காணொளியில், அந்த ஆடவர் தலைக்கவசம் இன்றி ஸ்கூட்டர் ஓட்டுவதை பார்க்க முடிகிறது.
அதனைத் தொடர்ந்து, சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987-இன் பிரிவில், கவனக்குறைவாக வாகனம் ஓட்டி பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தியதாக அவர் மீது வழக்குத் திறக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட ஆடவர் மது அல்லது போதைப்பொருளின் போதையில் அச்செயலைச் செய்தாரா?, உண்மையாகவே இச்சம்பவம் எப்போது நடந்தது? என்பது குறித்து தெரியாத நிலையில், அந்த ஆடவரைத் தேடும் நடவடிக்கையில் போலீசார் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர்.