Latestமலேசியா

கோலாலம்பூரில் இன்று ‘யூரோடான்ஸ்’ புகழ் பாடகர் Dr அல்பான் இசை நிகழ்ச்சி

கோலாலம்பூர், மே-23 – மலேசிய இரசிகர்களின் நீண்ட நாள் ஆவலைப் பூர்த்திச் செய்ய வந்துள்ளார் ‘யூரோடான்ஸ்’ புகழ் பாடகர் Dr அல்பான்.

இன்றிரவு 8 மணிக்கு Zepp Kuala Lumpur-ரில் அவரின் இசைக் கச்சேரி நடக்கிறது.

‘It’s My Life’, ‘Sing Hallelujah’ போன்ற அவரின் மறக்க முடியாத பாடல்கள் இதில் பெறவிருக்கின்றன.

இந்நிலையில் இசை நிகழ்ச்சியை ஒட்டி நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசி Dr அல்பான், ஆசியாவுக்குத் திரும்பியதில் பெருமகிழ்ச்சி அடைவதாகக் கூறினார்.

மலேசியாவின் விருந்தோம்பலையும் அவர் பாராட்டினார்.

நிகழ்ச்சி ஏற்பாட்டாளரான Mojo Projects நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி ரத்னா கே. நடராஜன், 90-ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் உச்சத்தை அடைந்து, தலைமுறை கடந்து இன்றளவும் புகழோடு இருக்கும் Dr அல்பானுக்கு ஒரு புகழ்மாலையாக இந்நிகழ்ச்சி அமையுமென்றார்.

இரசிகர்களை நிச்சயம் திருப்திப்படுத்தும் அளவுக்கு இன்றைய நிகழ்ச்சி அமையுமென அவர் உத்தரவாதம் அளித்தார்.

நைஜீரிய – சுவீடிஷ் இசைக் கலைஞரான Dr அல்பான், ‘யூரோடான்ஸ்’ அல்லது ‘ஹிப் போப் ரேகே’ இரகமாக அறியப்பட்டதாகும்.

நடன அரங்கையே அதிரச் செய்யும் அளவுக்கு அவரின் பாடல்களும் இசையும் தாக்கம் நிறைந்தவை.

இதனால் உலகம் முழுவதும் இவர் பெரும் இரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ளார்.

1992-ஆம் ஆண்டு வெளியான One Love இசை ஆல்பத்தில் இடம் பெற்ற ‘It’s My Life’ என்ற பாடல் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமடைந்து இன்று வரை Dr அல்பானின் புகழைத் தாங்கி நிற்கிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!