
கோலாலம்பூர், நவ 20 – கடந்த வாரம் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையமான ( KLIA ) வின் ) 1ஆவது முனையத்தில் மழைநீர் கசிவைத் தொடர்ந்து, Malaysia Airports Holdings Berhad உள் விசாரணை மற்றும் உடனடி சரிசெய்தல் நடவடிக்கைகளை அனுமதிக்கும் வகையில்வேலையை நிறுத்திவைக்கும் உத்தரவை பிறப்பித்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் இன்று உறுதிப்படுத்தினார்.
முனையத்தின் பிரதான கூரையில் நீர் கசிவு ஏற்பாடமல் இருக்கும் waterproof அல்லது நீர்தடுக்கும் பணிகளுக்குப் பொறுப்பான ஒப்பந்ததாரர் Teras Budi Resources Sdn Bhd லோக் என அடையாளம் காணப்பட்டார். 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம்தேதிவரைக்குமான 5.27 மில்லியன் ரிங்கிட் ஒப்பந்தத்தை இது கொண்டுள்ளதாக இன்று வெளியிட்ட அறிக்கையில் அந்தோனி லோக் விவரித்தார்.
நீர் கசிவு சம்பவத்திற்கு வழிவகுத்த அலட்சியத்திற்காக ஒப்பந்ததாரர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க MAHB எனப்படும் மலேசிய ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட்டிற்கு கு உத்தரவிடப்பட்டுள்ளது.
KLIA 1ஆவது முனையத்தின் நீர் கசிவு குறித்து உரையாற்றியதோடு , அண்மைய போக்குவரத்து சம்பவங்களை விசாரிக்க இரண்டு சிறப்புப் பணிக்குழுக்களை அமைப்பதாகவும் அமைச்சரவைக்குப் பிந்தைய அமைச்சின் கூட்டத்தின்போது போக்குவரத்து அமைச்சு கூறியிருந்தது. நவம்பர் 7 ஆம் தேதி Tanjung Pelapas துறைமுகத்தில் நடந்த கொள்கலன் வெடிப்பை முதல் பணிக்குழு ஆய்வு செய்யும்.
MV Kyparissia கப்பலில் பொருட்களை இறக்கும் போது நிகழ்ந்த அந்த வெடிப்பில் மூவர் உயிரிழந்ததோடு மேலும் மூவர் காயம் அடைந்தனர். நடைமுறை விதிமுறைகள் , பாதுகாப்பு இணக்கம் மற்றும் ஆபத்தான சரக்குகளை கையாளும் விவகாரம் குறித்து விசாரணையாளர்கள் ஆய்வை மேற்கொள்வார்கள்.



