Latestமலேசியா

கோலா கெட்டில் இரு நாய்கள் தாக்கியதில் பெண்ணின் தலையின் பின்பகுதி கிழிந்ததில் காயம்

பாலிங், ஏப் 2 – கோலா கெட்டில் Taman Desa Bidara வில் நேற்று இரண்டு ராட்வீலர் நாய்கள் தாக்கியதில் ஒரு பெண்ணின் தலையின் பின்பகுதி கிழிந்ததில் கடுமையான காயத்திற்கு உள்ளானார்.

அந்த பெண்ணுக்கு சுங்கைப் பட்டாணி சுல்தான் அப்துல் ஹலிம் மருத்துவமனையில் நேற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக தன்னை அடையாளம் காட்டிக்கொள்ளாத தாமான் டேசா பிடாராவின் குடியிருப்புவாசி ஒருவர் தெரிவித்தார்.

இச்சம்பவத்தில் காயம் அடைந்த உள்நாட்டைச் சேர்ந்த மற்றொரு பெண், உள்நாட்டைச் சேர்ந்த இரண்டு ஆடவர்கள் மற்றும் எகிப்தைச் சேர்ந்த 28 வயதுடைய விரிவுரையாளர் ஒருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

சுங்கைப் பட்டாணியில் Sultan Abdul Halim Muadzah shah பல்கலைக்கழகத்தில் கற்பிக்கும் அந்த விரிவுரையாளர் விடியற்காலை தொழுகையை நிறைவேற்றுவதாற்காக தாமான்
தேசா பிடாரா தொழுகை மையத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது நாய்களால் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

நேற்று விடியற்காலை 4.30 மணியளவில் இச்சம்பவம் நடந்த இடத்திலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் உள்ள தனது உரிமையாளரின் வீட்டில் இருந்து தப்பிய நாய்கள் முதலில் வயதான பெண்ணைத் தாக்கியுள்ளன.

இரண்டு மணி நேரத்திற்குள் அந்த நாய்கள் மேலும் நால்வரை வெவ்வேறு இடங்களில் தாக்கியதாகக் கூறப்பட்டது. பரிசோதனைக்காக கூலிம் கால்நடைத் துறையிடம் நாய்களை ஒப்படைக்கும்படி அதன் உரிமையாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், இரண்டு வாரங்கள் அவை தனிமையில் வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

அந்த நாய்களுக்கு ரேபிஸ் ( Rabies ) நோய்த் தொற்றின் அறிகுறிகள் இருக்கிறதா என்பதை கண்டறிவதற்கு சோதனை நடத்தப்படும் என கெடா கால்நடை சேவைகள் துறையின் இயக்குனர் டாக்டர் ஷஹாருல் அக்மார்
( Shaharul Akmal ) தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!