![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2025/02/sanjay.jpg)
மும்பை, பிப்ரவரி-9,
தங்களின் அபிமான சினிமா நட்சத்திரங்களுக்காக தீவிர இரசிகர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் என்பதை கேட்டிருக்கிறோம் பார்த்திருக்கிறோம்.
நட்சத்திரங்கள் உடல் நலம் குன்றினால் அவர்கள் நலம் பெற வேண்டி சிறப்பு பூஜை நடத்துவது, விரதமிருப்பது, தேர் இழுப்பது என இரசிகர்கள் உருகுவதைப் பார்த்திருக்கிறோம்.
ஆனால், அபிமான நட்சத்திரத்திற்கு கோடிக்கணக்கில் சொத்தை உயில் எழுதி வைத்த இரசிகரைப் பற்றி நீங்கள் கேட்டதுண்டா?
ஆம், 80-ஆம் 90-ஆம் ஆண்டுகளில் போலீவூட்டைக் கலக்கிய நடிகர் சஞ்சய் தத்தின் தீவிர இரசிகை ஒருவர் தான் அக்காரியத்தைச் செய்துள்ளார்.
நிஷா பட்டீல் எனும் அப்பெண், 2018-ஆம் ஆண்டில் இறந்துபோனார்; இந்நிலையில் திடீரென சஞ்சய் தத்தைத் தொடர்புகொண்ட போலீஸ், தனது அனைத்து சொத்துக்களையும் அப்பெண் உங்களுக்கே எழுதி வைத்துள்ளார் எனக் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினர்.
நிஷா, சஞ்சய்க்கு எழுதி வைத்த சொத்துக்கள் கொஞ்ச நஞ்சமல்ல… 72 கோடி ரூபாய்.
பணத்தையும் இதர சொத்துக்களையும் சஞ்சய் தத்தின் கணக்குகளுக்கே மாற்றி விடுமொறு, இறப்பதற்கு முன் வங்கிகளுக்கு அவர் கடிதம் வேறு எழுதியுள்ளார்.
முன் பின் தெரியாத ஒருவருக்கு தன் மீது இவ்வளவு அன்பா என ஆச்சரியம் அடைந்த அதே வேளை, அச்சம்பவம் சஞ்சய் தத்துக்கு பெரும் தர்ம சங்கடத்தையும் ஏற்படுத்தியது.
எனவே, தன் பெயரில் உயில் இருந்தாலும் அச்சொத்துகளுக்கு சஞ்சய் உரிமைக் கோரவில்லை; அதைத் தெளிவாகப் போலீஸிடம் தெரிவித்து விட்டதாக அவரின் வழக்கறிஞர் சொன்னார்.
அந்த 72 கோடி சொத்தும் என்னவானது எனத் தெரியவில்லை.
ஹிந்தி திரையுலகின் சகாப்தங்களான சுனில் தத் – நர்கீஸ் நட்சத்திர தம்பதியின் மகனான சஞ்சய் தத் ஆகக் கடைசியாக, கன்னடத்தில் KGF 2, தமிழில் Leo போன்ற பெரியப் படங்களில்