
கோலாலம்பூர், பிப் 19 – நிர்ணயிக்கப்பட்ட நடவடிக்கை விதிமுறைகளை பின்பற்றாமல் சோதனை நடத்தி மிரட்டி பணம் பறித்தாக கூறப்படும் புகார்கள் குறித்து தனது அதிகாரிகளுக்கு எதிராக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நேற்று மதியம் 1 மணியளவில் ‘En Abdul’ என்ற முகநூல் கணக்கில் சம்பவம் குறித்த வீடியோ மற்றும் அறிக்கை வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து விசாரணை தொடங்கப்பட்டதாக பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் துணை கமிஷனர் ஷாருல்நிஷாம் ஜபார் ( Sharulnizam Ja’afar) தெரிவித்தார்.
மேலும் மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த நான்கு அதிகாரிகள் அந்த இடத்தில் சோதனை நடத்தியிருப்பது வீடியோவில் பதிவாகி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது .
பெட்டாலிங் ஜெயா Pelangi Damansaraவில் Ops Tapis நடவடிக்கையில் கடந்த ஆண்டு அக்டோபர் 10 ஆம் தேதி இந்த சோதனை நடத்தப்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் வைரலானதை தொடர்ந்து விசாரணை தொடங்கப்பட்டிருப்பதாகவும் இதில் முறைகேடு நடந்திருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஷாருல்நிஷாம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.