Latestமலேசியா

சத்துணவில் மாட்டுப் பாலுக்குப் பதிலாக இனி ‘மீன் பால்’; இந்தோனீசிய நெட்டிசன்கள் சூடான விவாதம்

ஜாகார்த்தா, செப்டம்பர் -14, இந்தோனீசியாவில் பள்ளி மாணவர்களுக்கான இலவச மதிய உணவுத் திட்டத்தில் இனி மாட்டுப் பாலுக்கு பதிலாக ‘மீன் பால்’ கொடுக்கும் பரிந்துரை, அந்நாட்டு நெட்டிசன்கள் மத்தியில் சூடான விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

4.6 பில்லியன் டாலர் மதிப்பில் மாணவர்களுக்கான அப்புதிய இலவச சத்துணவுத் திட்டம், அக்டோபரில் புதிய அதிபராக பதவியேற்கவுள்ள Prabowo Subianto-வின் தேர்தல் வாக்குறுதியாகும்.

இந்தோனீசியக் குழந்தைகள் வளர்ச்சிக் குன்றிப் போவதைத் தடுக்கும் விதமாக அத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் இது உண்மையிலேயே ஆரோக்கியமானது தானா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

‘மீன் பாலில்’ சீனியின் அளவு அதிகமாக இருக்கக்கூடும்; அதோடு நீண்டகால அடிப்படையில் அது ஆரோக்கியமானதா என்ற அறிவியல் ஆதாரங்கள் இல்லையென்பதும் நெட்டிசன்களின் கவலையாகும்.

உணவியல் நிபுணர்களும் சந்தேகங்களை எழுப்புகின்றனர்.

மாணவர்களுக்கு ஒவ்வாமைப் பிரச்சை ஏற்படலாம் என அவர்கள் வாதிடுகின்றனர்.

இந்தோனீசிய அரசாங்கத்தின் ஆதரவுடன் கடந்தாண்டு அங்கு ‘மீன் பால்’ உற்பத்தி அறிமுகம் கண்டது.

உள்நாட்டில் மீன்களின் புரதம் தூள் வடிவில் பதப்படுத்தப்பட்டு, பின்னர் திரவமாக மாற்றப்படுகிறது.

மீன் வாடையைப் போக்குவதற்காக சுவையூட்டியும் கலக்கப்பட்டு ‘மீன் பாலாக’ அது விற்கப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!