கோத்தா கினாபாலு, நவம்பர்-28, சபா, கோத்தா கினாபாலு மற்றும் பெனாம்பாங் மாவட்டங்களில் மதுபானங்கள், சிகரெட், மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளைக் கடத்தும் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.
வரியோடு சேர்த்து 20 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான பொருட்களை கடத்தும் அம்மாபெரும் நடவடிக்கையை, PGA எனப்படும் பொது தற்காப்புப் படை 3 வெவ்வேறு
சோதனைகளின் போது முறியடித்தது.
நவம்பர் 19 முதல் 26 வரை மேற்கொள்ளப்பட்ட அச்சோதனைகளில் 29 ஆடவர்களும் கைதாகினர்.
இதையடுத்து, சபாவின் மேற்குக்கரையில் முறையான பெர்மிட் இல்லாமல் மதுபானங்கள், சிகரெட்டுகளைக் கடத்தி விற்கும் மற்றும் முறையான ஹலால் சான்றிதழ் இல்லாமல் இறைச்சிகளை விற்கும் கும்பலின் அட்டகாசம் முடிவுக்கு வந்துள்ளது.
கைதானவர்கள் மீது சுங்கச் சட்டம், குடிநுழைவுச் சட்டம், விலங்குகள் நலச் சட்டம், உணவுச் சட்டம், உணவுப் பாதுகாப்புச் சட்டம் என பல்வேறு பிரிவுகளில் விசாரணை நடைபெறுகிறது.