பத்து பஹாட், ஜனவரி-7 – சமூக ஊடக நேரலையில் போலி சுடும் ஆயுதங்களை விற்று வந்த கும்பல் ஜோகூர் பத்து பஹாட்டில் சிக்கியுள்ளது.
பாரிட் சூலோங்கில் உள்ள ஒரு கடை வீட்டில் அதிரடிச் சோதனை நடத்தியதில் 155 போலி சுடும் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.
அதிகாரிகள் வருவதை எப்படியோ தெரிந்துகொண்டு, போலி ஆயுதங்களை கடையிலிருந்து வேறிடத்துக்கு மாற்ற அவர் முயன்றதும் குறிப்பிடத்தக்கது.
அதிகாரிகள் கண்ணில் மண்ணைத் தூவ, கீழ் மாடியில் கைப்பேசி உபரிப்பாகங்களையும் மேல்மாடியில் போலி சுடும் ஆயுதங்களையும் அவர்கள் விற்று வந்துள்ளனர்.
சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அப்பொருட்களை சமூக ஊடகங்கள் வாயிலாக 70 ரிங்கிட் முதல் 430 ரிங்கிட் வரை அவர்கள் விற்று வந்துள்ளனர்.
இந்நிலையில் 25 முதல் 33 வயது வரையிலான 3 பணியாளர்கள் விசாரணைக்காக கைதாகினர்.
அவர்களைக் கேட்டால், ‘பொம்மை’ துப்பாக்கியை விற்பதொன்றும் தவறில்லையே என பதில் வந்துள்ளது.