Latestசினிமா

சர்ச்சைக்கு மத்தியில் ஒரே திருமண விழாவில் நயன்தாரா, தனுஷ்; முகத்தைத் திருப்பிக் கொண்ட வீடியோ வைரல்

சென்னை, நவம்பர்-22 – திருமண ஆவணப் படம் தொடர்பாக நடிகர் தனுஷை, நடிகை நயன்தாரா கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்ட ஒரே வாரத்தில், பிரபல தயாரிப்பாளர் இல்லத் திருமணத்தில் இருவரும் பங்கேற்ற வீடியோக்கள் வைரலாகியுள்ளன.

தனுஷ் அடுத்ததாக ‘இட்லி கடை’ என்ற படத்தை இயக்கி வரும் நிலையில், அதன் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரின் திருமண நிகழ்ச்சியில் தான் இரசிகர்கள் ‘எதிர்பாரா’ இச்சந்திப்பு நடந்துள்ளது.

இருவருமே முதல் வரிசையில் சற்று தள்ளி அமர்ந்து, முகத்தைத் திருப்பிக் கொண்டு கண்டும் காணாமல் இருந்து விட்டனர்.

நயன்தாரா அறிக்கையின் கடுமையைப் பார்த்தவர்களுக்கு, அந்த தர்மசங்கடமான தருணங்கள் புரிந்திருக்கும்.

நயன்தாராவின் கணவரும் இயக்குநருமான விக்னேஷ் சிவன், சிவகார்த்திகேயன், இசையமைப்பாளர் அனிருத் ஆகியோரும் அந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

‘நானும் ரவுடிதான்’ படத்தின் சில வினாடி காட்சிகளை, தனது திருமண ஆவணப் படத்தில் பயன்படுத்த தயாரிப்பாளர் தனுஷ் அனுமதித் தரவில்லை எனக் கூறி, அண்மையில் 3 பக்கங்களுக்கு கடுமையாகத் தாக்கி அறிக்கை வெளியிட்டிருந்தார் நயன்தாரா.

Nayanthara: Beyond the Fairy Tale’ என்ற அந்த ஆவணப் படம் ஒருவழியாக நவம்பர் 18-ல் Nelflix-சில் வெளியானது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!