
ஜெடா, ஆகஸ்ட்-1- சவூதி அரேபியா, ஜெடாவில் ஒரு கேளிக்கைக் பூங்காவில் சுற்றிக் கொண்டிருந்த 360 பாகை இராட்டினம் திடீரென உடைந்து விழுந்தது.
இதனால் இராட்டினத்திலிருந்த இளைஞர்களும் பெண்களும் தூக்கி வீசப்பட்டு தரையில் விழுந்தனர். இதில் 23 பேருக்கு காயமேற்பட்டது.
அவர்களில் மூவர் மோசமான காயங்களுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். தொழில்நுட்பக் கோளாறே அச்சம்பவத்துக்குக் காரணம் என தொடக்கக் கட்ட விசாரணைத் தெரிவிக்கிறது.
இராட்டினத்தின் மையக் கம்பம் இரண்டாக உடைந்து விழும் பகீர் காட்சிகள் அடங்கிய வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளன.