
செப்பாங், அக்டோபர் -1,
‘Batik’ விமான நிறுவனத்தின் இரண்டு பணியாளர்களைத் திட்டி தாக்கிய குற்றச்சாட்டில், கம்போடிய நாட்டு நபர் ஒருவருக்கு நீதிமன்றம் இன்று 900 ரிங்கிட் அபராதம் விதித்துள்ளது.
இந்நிலையில், நீதிமன்றத்தில் சந்தேக நபரின் முன்னிலையில் குற்றப்பத்திரிகை வாசிக்கப்பட்ட போது, அவர் அக்குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
கடந்த செப்டம்பர் KLIA செயற்கைக்கோள் கட்டிடத்தில் (Satellite Building) ‘Batik’ பாதுகாப்பு அதிகாரியிடம் வன்முறையை பயன்படுத்தியதாகவும் அதே நாள் மாலையில் விமானப் பணியாளரிடம் அவமதிப்பான வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டார்.
இந்நிலையில் நீதிபதி அவ்விரண்டு குற்றங்களுக்கும் சேர்த்து 900 ரிங்கிட் அபராதம் விதித்ததைத் தொடர்ந்து குற்றவாளி அந்த அபராத பணத்தை உடனடியாக செலுத்தினார்.