கோலாலம்பூர், செப்டம்பர் 5 – டேசா தாசிக் (Desa Tasik), ஜாலான் தாசிக் செலாத்தான் 20 (Jalan Tasik Selatan 20), மற்றும் பண்டார் தாசிக் செலாத்தான் (Bandar Tasik Selatan) ஆகிய இடங்களைச் சுற்றி சாலையை மறித்த வெளிநாட்டு வியாபாரிகளின் பொருட்களைக் கோலாலம்பூர் மாநகராட்சி மன்றம் நேற்று பறிமுதல் செய்தது.
அமலாக்கத் துறை மற்றும் பண்டார் துன் ரசாக் அலுவலகத்தின் சோதனை நடவடிக்கையின் போது பிளாஸ்டிக் மேசைகள், நாற்காலிகள், கெனோபி, எரிவாயு சிலிண்டர் மற்றும் இதர வியாபார பொருட்களையும் 7 வழக்குகளின் கீழ், பறிமுதல் செய்யப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, கோலாலம்பூரின் கூட்டரசு பகுதியின் 11 நாடாளுமன்றங்களிலும் தொடர்ச்சியான சிறப்பு நடவடிக்கைகளின் மூலம் கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் என்று DBKL அறிக்கையின் வாயிலாகத் தெரிவித்திருக்கிறது.