
கோலாலம்பூர், ஆக 27 – ஜோகூர் , சிகமாட்டில் இன்று ரெக்டர் கருவியில் 3.2 அளவில் பதிவான சிறிய அளவிலான நில நடுக்கம் மூன்றாவது முறையாக ஏற்பட்டது.
காலை மணி 8.59அளவில் அந்த நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக Met Malaysia எனப்படும் மலேசிய வானிலைத்துறை அறிவித்தது.
அந்த நிலநடுக்கத்தின் அதிர்வை ஜோகூர் மற்றும் பஹாங்கின் தென் பகுதியிலும் உணர முடிந்தது.
நிலைமையை மலேசிய வானிலைத்துறை தொடர்ந்து கவனித்து வருவதாக x பதிவில் Met Malaysia பதிவிட்டது.
ஏற்கனவே கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை மணி 6.13 அளவில் ரெக்டர் கருவியில் 4.1 அளவில் பதிவான நிலநடுக்கம் மற்றும் அதே நாளில் பத்து பஹாட்டில் காலை மணி 9 அளவில் ரெக்டர் கருவியில் 2.8 அளவில் பதிவான மற்றொரு சிறிய அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.