சிங்கப்பூர், ஆகஸ்ட் 21 – சிங்கப்பூர் வூட்லாண்ட்சில் அமைந்துள்ள விஇபி எனும் மலேசியாவிற்குச் செல்ல வாகன நுழைவு அனுமதி அட்டைக்கான தகவல் அலுவலகத்துக்குச் செல்லும் சிங்கப்பூர் வாகனமோட்டிகளுக்குச் சிறந்த சேவையைக் கொடுக்குமாறு போக்குவரத்து அமைச்சர் வலியுறுத்தியிருக்கிறார்.
கடந்த திங்கட்கிழமை சிங்கப்பூர் விஇபி அலுவலகத்தில் சிங்கப்பூர் வாகனமோட்டிகள் பலர் மலேசியாவுக்குள் நுழைவதற்கான வாகன நுழைவு அனுமதி விண்ணப்பங்களுக்கான உதவியைப் பெற சிரமத்தை எதிர்நோக்கியுள்ளனர்.
TCSens எனும் வெளிக் குத்தகை நிறுவனம் திங்களன்று அலுவலகத்தை வூட்லாண்ட்சில் திறக்கும் என்பதை குறிப்பிட்டு, சரியான இடத்தை அறிவிக்கவில்லை.
இதனால், சிங்கப்பூர் வாகனமோட்டிகளில் பலர் இடத்தை சுயமாகவே கண்டுபிடித்து, மதிய உணவு நேரத்தின்போது அலுவலகத்தில் திரளத் தொடங்கியிருக்கின்றனர்.
“விஇபி விண்ணப்பச் செயல்முறையை எளிதாக்க அலுவலகத்தின் திறப்பைப் பற்றி ஏற்கனவே அறிவித்துவிட்டோம். அந்தத் தகவலைப் பொதுவில் அறிவிக்கும்படியும் நிறுவனத்திடமும் கூறினோம். குத்தகை நிறுவனம் என்பதால் அதன் சார்பாக அமைச்சு அறிக்கைகள் வெளியிட முடியாது” என்று இது குறித்து அமைச்சர் அந்தனி லோக் விளக்கினார்.