சித்தியவான், அக்டோபர் 1 – ஆடவர் ஒருவர், தனது உடன்பிறந்த அண்ணனைக் கொன்றதாக, இன்று மஞ்சோங் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார்.
கடந்த செப்டம்பர் 25ஆம் திகதி, அதிகாலை 2.25 மணி முதல் 2.39 மணிக்குள், சித்தியாவின், தாமன் முஹிப்பாவில் (Taman Muhibbah) உள்ள வீடொன்றில் 40 வயதான அந்த ஆடவர், 46 வயது மதிக்கதக்க அவரின் அண்ணனைக் கொன்றுள்ளார்.
வாக்கு மூலம் எதுவும் இன்று பதிவு செய்யப்படாத நிலையில், குற்றம் சாட்டப்பட்ட அந்த ஆடவரை மனநலப் பரிசோதனைக்காக ஈப்போவில் உள்ள பஹாகிய உலு கிந்தா (Bahagia Ulu Kinta) மருத்துவமனைக்கு அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டது.
தண்டனை சட்டம் செக்ஷ்ன் 302-இன் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்படும் நிலையில், குற்றம் நிரூபிக்கப்பட்டால், மரண தண்டனை அல்லது குறைந்தபட்சம் 30 ஆண்டுகள் அல்லது குறையாமல்12 பிரம்படிகளும் விதிக்கப்படலாம்.