
சென்னை, ஏப்ரல்-4- 70-ஆம் ஆண்டுகளின் இறுதியிலும் 80-ஆம் ஆண்டுகளின் தொடக்கத்திலும் மலையாளம் மற்றும் தமிழ்ப் படங்களில் காதல் நாயகனாக வலம் வந்த நடிகர் ரவிக்குமார், இன்று சென்னையில் காலமானார்.
அவருக்கு வயது 71.உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தவர், உள்ளூர் நேரப்படி இன்று மதியம் மரணமடைந்தார்.
இயக்குநர் கே.பாலசந்தரின் ‘அவர்கள்’ ‘பகலில் ஒரு இரவு’ போன்ற படங்களில் இவர் நடித்துள்ளார்.
அதிலும், ‘பகலில் ஒரு இரவு’ படத்தில் பிரபல நடிகை ஸ்ரீ தேவிக்கு அவர் ஜோடியாக நடித்தது குறிப்பிடத்தக்கது.
கடைசியாக இவர் நடித்த சில தமிழ்ப் படங்களில் ரஜினிகாந்தின் சிவாஜி, விஜயின் யூத் ஆகியவை குறிப்பிடத்தக்கவையாகும்.
ராதிகாவின் சித்தி, செல்லமே, வாணிராணி உட்பட பல்வேறு தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து பிரபலமானவர் ரவிக்குமார்.