
சிரம்பான், ஏப் 13- வேலையில்லாத நபர் ஒருவர், தனது கை தொலைபேசியில் 200-க்கும் மேற்பட்ட சிறார் ஆபாசப் படங்களை வைத்திருந்த குற்றச்சாட்டை இன்று செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.
31 வயதுடைய தெங்கு முக்ரிஷ் ஷா என்ற அந்த நபருக்கு இக்குற்றத்திற்காக 7 நாட்கள் சிறைத் தண்டனையும் 5,000 ரிங்கிட் அபராதமும் விதிப்பதாக நீதிபதி டத்தோ சுரித்தா புடின் தீர்ப்பளித்தார்.
ஏப்ரல் 7ஆம் தேதியன்று பிற்பகல் சுமார் 3 மணியளவில், ஜெம்போல், kampung Serting Uluவில் இக்குற்றத்தை புரிந்ததாக கூறப்பட்டது.
சம்பந்தப்பட்ட இடத்தில் அந்த ஆடவனை கைது செய்த போலீசார் அவனது கைத் தொலைபேசியில் பரிசோதனை செய்தபோது அதில் பெரியோர்கள் சம்பந்தப்பட்ட 293 ஆபாச வீடியோ படங்களும் இருந்ததை கண்டுப் பிடித்தனர்.
ஜெம்போல் , கம்போங் செர்டிங் உலு, என்ற இடத்தில், அந்த நபர் இக்குற்றத்தை புரிந்ததாக கூறப்பட்டது.
2017 ஆம் ஆண்டின் ( சட்டம் 792) சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சட்டத்தின் 10ஆவது விதியின் தெங்கு முக்ரிஸ் இக்குற்றத்தை புரிந்ததாக குற்றச்சாட்டப்பட்டார்.
அதோடு தனக்கு விதிக்கப்பட்ட 5,000 ரிங்கிட் அபராதத்தை செலுத்தத் தவறினால் ஐந்து மாதம் சிறைத் தண்டனையை அனுபவிக்கும்படி அந்த நபருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.



