
வாஷிங்டன் , ஜன 21 – புறப்பட்ட சிறிது நேரத்திலேயே சிறிய அளவிலான மின் சிக்கலை அதிபர் Donald Trumpபின் Air Force One விமானம், செவ்வாய்க்கிழமை இரவு வாஷிங்டனுக்கு அருகிலுள்ள Andrews விமானப் படைத் தளத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியது.
புதிய விமானத்தில் பயணம் தொடரும் என்று வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட்
( Karoline Leavitt ) தெரிவித்தார்.
சுவிட்சர்லாந்தில் நடைபெறும் உலக பொருளாதார ஆய்வரங்கில் மற்ற உலகத் தலைவர்களுடன் இணைந்து கொள்வதற்காக டிரம்ப் Davosசிற்கு செல்கிறார்.
2011 ஆம் ஆண்டு கனெக்டிகட்டில் (Connecicut ) நடந்த ஒரு நிகழ்வுக்கு அதிபர் பராக் ஒபாமாவை ஏற்றிச் சென்றபோது மோசமான வானிலை காரணமாக Air Force one விமானம் தரையிறங்குவதை நிறுத்தியது.
2012 ஆம் ஆண்டு, அப்போதைய துணையதிபர் ஜோ பைடனை ஏற்றிச் சென்ற Air Force Two விமானம் கலிபோர்னியாவில் பறவைகளால் மோதிய போதிலும் , பின்னர் எவ்வித பிரச்னையுமின்றி அந்த விமானம் தரையிறங்கியது.



