Latestமலேசியா

சிலாங்கூரில் வட்டி முதலையிடம் வாங்கியக் கடனைத் திருப்பிச் செலுத்திய போதும், பெட்ரோல் குண்டு வீசப்படுவதால் குடும்பமே பீதி

காஜாங், நவம்பர்-11 – சிலாங்கூர், காஜாங், சுங்கை ஜெலோக்கில், வட்டி முதலை கூலிக்கு வைத்த ஆட்களால் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதிலிருந்து, ஒரு குடும்பமே கடந்த ஒரு மாதமாக பயத்தில் வாழ்ந்து வருகிறது.

ஜூலை வாக்கில் சிங்கப்பூரில் உள்ள வட்டி முதலையிடம் தனது அக்காள் ஆயிரம் சிங்கப்பூர் டாலரை வட்டிக்குக் கடனாக வாங்கியதிலிருந்து, அறுவர் கொண்ட குடும்பே அல்லப்படுவதாக, பாதிக்கப்பட்ட 31 வயது லீ சொன்னார்.

வாங்கியப் பணத்தை வட்டியோடு சேர்த்து பத்தாயிரம் ரிங்கிட்டாக அக்காள் செலுத்தி விட்டப் பிறகும், குடும்பம் தொந்தரவு செய்யப்படுவதாக அவர் சொன்னார்.

பணத்தை வாங்கி விட்டு, முடக்கப்பட்ட வங்கிக் கணக்கை சரி செய்ய மேலும் 15,000 ரிங்கிட்டைக் கேட்டு அக்கும்பல் வற்புறுத்தியது.

அதையும் எப்படியோ புரட்டித் தந்து விட்டோம்; ஆனால் அதுவும் போதாதென்று, சிங்கப்பூரில் கருப்புப் பட்டியலிலிருந்து பெயரை நீக்க 36,000 ரிங்கிட்டை தர வேண்டுமென கட்டாயப்படுத்தினர்.

முடியாதென்று சொல்லி விட்டு, செப்டம்பர் மாதமே தனது அக்காள் மலேசியா திரும்பி விட்ட நிலையில், அக்டோபர் 15-ஆம் தேதி தொடங்கி இதுவரை ஆறு தடவையாவது தொந்தரவு செய்து விட்டனர்.

4 முறை வீட்டில் பெட்ரோல் குண்டை வீசி தீ வைத்து விட்டனர்; நாங்களும் ஐந்து முறை போலீசில் புகார் செய்து விட்டோமென, சிலாங்கூர் DAPSY பொது புகார் மையத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் லீ கூறினார்.

வீட்டில் வயதான தாய் தந்தையும் சிறு பிள்ளைகளும் இருக்கிறார்கள்; அவர்களின் பாதுகாப்பும் முக்கியமென்பதால், போலீசார் இப்பிரச்னைக்குத் தீர்வு கண்டு உதவ வேண்டுமென லீக் கேட்டுக் கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!