Latestமலேசியா

சிலாங்கூர் அரசுப் பணியாளர்களுக்கு 3 மாத போனஸ்; — டிசம்பர் 18-ல் கடைசிக் கட்ட வழங்கல்

ஷா ஆலாம், நவம்பர்-15, சிலாங்கூர் மாநில அரசாங்கம், அதன் பணியாளர்களுக்கு 3-மாத சிறப்பு நிதி உதவியை அறிவித்துள்ளது.

இந்த போனஸ் இரண்டு பகுதிகளாக வழங்கப்படுகிறது.

அதில் ஒன்றரை மாத ஊதியம் இந்த ஆண்டின் முற்பகுதியிலேயே வழங்கப்பட்டு விட்டது.

எஞ்சிய ஒன்றரை மாத போனஸ் அல்லது குறைந்தபட்சம் RM1,000 வரும் டிசம்பர் 18-ஆம் தேதி வழங்கப்படும்.

மாநில வளர்ச்சிக்காக உழைக்கும் அரசுப் பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் அடையாளமாக இந்த ஊக்கத்தொகை வழங்கப்படுவதாக, மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி என தெரிவித்தார்.

இதனிடையே, MPKK கிராமத் தலைவர்கள், கம்போங் பாரு தொடர்பு அதிகாரிகள், உள்ளூர் இந்திய சமூகத் தலைவர்கள், Wanita Berdaya மேற்பார்வையாளர்கள், மற்றும் Penggerak Belia Selangor உறுப்பினர்களுக்கும் ஒரு மாதத் தொகை வழங்கப்படும்.

அதே சமயம் பள்ளிவாசல் பணியாளர்களுக்கு Mentri Besar Incorporated வாயிலாக RM500 வழங்கப்படும்.

சிலாங்கூர் மாநில அரசின் 2026 பட்ஜெட்டை சட்டமன்றத்தில் தாக்கல் செய்த போது அமிருடின் அதனை அறிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!