ஷா அலாம், நவ 29 – சிலாங்கூர் ம.இ.காவின் தீபாவளி விருந்து உபசரிப்பு நிகழ்வு நேற்றிரவு ஷா அலாம், சுங்கை ரெங்கம் தமிழ்ப்பள்ளி மாநாட்டு நிலையத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. ம.இ.காவின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ SA விக்னேஸ்வரன், தேசிய துணைத்தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன், சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் பாப்பாராயுடு, கோத்த கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் எஸ் . பிரகாஷ், தேசிய முன்னணி உறுப்புக் கட்சியின் தலைவர்களும் ம.இ.காவின் தலைவர்களும் இந்த நிகழ்ச்சியில் திரளாக கலந்து சிறப்பித்தனர்.
மடானி அரசாங்கத்தின் இடம்பெற்றுள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் மக்களுக்குமிடையிலான ஒன்றுமையும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்தும் வகையில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சிலாங்கூர் ம.இ.காவின் தலைவர் டத்தோ M. சங்கர் ராஜ் அய்யங்கார் வணக்கம் மலேசியாவிடம் தெரிவித்தார்.
இதனிடையே இந்த நிகழ்ச்சியில் அதிகமான மக்கள் கலந்துகொள்வதற்கான ஏற்பாடுகளை சிறந்த முறையில் ஏற்பாடு செய்துள்ள அதன் ஏற்பாட்டாளர்களுக்கு தாம் நன்றி கூறமைப்பட்டுள்ளதாக தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் தெரிவித்தார்.
உள்ளூர் கலைஞர்களின் இசை நிகழ்ச்சியோடு நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ம.இ.காவின் உதவித் தலைவர்களான டத்தோ அசோஜன், டத்தோ நெல்சன், டத்தோ முருகையா , ம.இ.காவின் தேசிய பொருளாளர் டத்தோ சிவக்குமார் , டத்தோ முனியாண்டி, மற்றும் .சிவசுப்ரமணியம் உட்பட மத்திய செயலவை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். சுமார் 1,500 பேர் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் அதிஸ்ட குலுக்கில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.