
பெங்களூரு, ஏப்ரல்-24- சீனா மீதான வரி குறைக்கப்படலாமென அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கோடி காட்டியதை அடுத்து, நேற்று தங்க விலை சரிந்தது.ஸ்போட் தங்கத்தின் விலை 2.1 விழுக்காடு சரிந்து ஒரு கிராமுக்கு 466 ரிங்கிட் 578 சென்னாக பதிவாகியது.
முன்னதாக அதன் விலை 493 ரிங்கிட் 32 சென்னாக புதிய உச்சத்தைத் தொட்டது குறிப்பிடத்தக்கது.அமெரிக்க தங்கத்தின் விலையும் 2.9 விழுக்காடு சரிவு கண்டது.
அமெரிக்கா – சீனா இடையிலான வர்த்தகப் பதற்றம் தணியும் என்ற ரீதியில் டிரம்ப் பேசியிருப்பதும், மத்திய ரிசர்வ் வங்கித் தலைவர் ஜெரோம் பவலை பணியிருந்து நீக்க மாட்டேன் என அவர் உறுதியளித்திருப்பதும், சந்தையில் நிலவி வந்தக் கவலையை குறைக்க உதவியுள்ளது.
இதனால், பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படும் தங்கம் மீதான ஈர்ப்புக் குறைந்தது.முதலீட்டாளர்களுக்கும், பங்குச் சந்தை முதலீட்டு மீதான நம்பிக்கை அதிகரித்துள்ளது.இதுவே, தங்க விலை சரியக் காரணமாகும்.
உலகின் இருபெரும் பொருளாதார வல்லரசுகளான அமெரிக்காவும் சீனாவும் தங்களுக்கிடையிலான மோதலை முடிவுக்குக் கொண்டு வந்தால், தங்க விலை மேலும் குறையுமென எதிர்பார்க்கப்படுகிறது.