
சுங்கைப் பட்டாணி, ஆக 18 – சுங்கைப் பட்டாணி, Sungai Lalangகின் கம்போங் பாருவில் நேற்று மாலை ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு வீடுகள் அழிந்தன.
இந்த சம்பவத்தில், தீ விபத்து ஏற்பட்ட பகுதியில் 40 வயது மனநலம் பாதிக்கப்பட்ட ஆடவர் ஒருவரை காயம் எதுவுமின்றி தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.
நேற்றிரவு மணி 7.52 அளவில் தீ விபத்து குறித்து தனது துறைக்கு அழைப்பு வந்ததாக கெடா தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் 2ஆவது மண்டலத்தின் தலைவரான மூத்த தீயணைப்பு அதிகாரி Mohd Naim Mat Jaffar கூறினார்.
தீ விபத்து இரவு 8.25 மணிக்கு வெற்றிகரமாக கட்டுப்படுத்தப்பட்டு இரவு 11.46 மணிக்கு முழுமையாக அணைக்கப்பட்டது.
இத்தீவிபத்துக்கான காரணம் மற்றும் இழப்புகள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இதனிடையே தீ விபத்து தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக தனது துறை ஒருவரைக் கைது செய்துள்ளதை Kuala Muda மாவட்ட போலீஸ் தலைவர் துணை கமிஷனர் Hanyan Ramlan உறுதிப்படுத்தினார்.