
சுங்கைப் பட்டாணி , பிப் 28 – சுங்கைப் பட்டாணி சுல்தான் அப்துல் ஹலீம் (Sultan Abdul Halim ) மருத்துவமனை கட்டிடத்தின் எட்டாவது மாடியின் மேற்கூரையில் அமர்ந்திருந்த நோயாளியின் செயலினால் , எங்கே அவர் கீழே குதித்துவிடுவாரோ என்ற அச்சத்தில் பொதுமக்கள் பெரும் பரபரப்புக்கு உள்ளாகினர்.
எனினும் 57 வயதுடைய அந்த ஆடவரிடம் பேசி அவரை கீழே கொண்டுவருவதில் தீயணைப்பு வீரர்கள் வெற்றி பெற்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக இன்று காலை மணி 9.48 அளவில் தங்களுக்கு அழைப்பு கிடைத்ததாக அமான் ஜெயா தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் தலைவர், உதவி கண்காணிப்பாளர் அஸஹாரி அப்துல்லா ( Azahari Abdullah ) தெரிவித்தார்.
சிறிது நேரத்தில் ஆறு தீயணைப்பு வீரர்கள் அந்த மருத்துவமனைக்கு விரைந்த அவருடன் பேச்சு நடத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இந்த நடவடிக்கையில் ஐந்து போலீஸ் அதிகாரிகள் மற்றும் சுகாதார அமைச்சின் அதிகாரிகளும் இணைந்தனர்.
அதனை தொடர்ந்து அந்த நபருடன் பேச்சு நடத்தி அவரை கீழே கொண்டுவருவதற்கு இணக்கம் காண்பதில் வெற்றி பெற்றோம் என Azahari Abdullah தெரிவித்தார்.
அதன்பின் அந்த ஆடவர் மேல் நடவடிக்கைக்காக மருத்துவமனை தரப்பினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.