சுங்கை பூலோ, செப்டம்பர் -19, சிலாங்கூர், சுங்கை பூலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த தண்டனை கைதி அங்கிருந்து தப்பியோடியதை போலீஸ் உறுதிப்படுத்தியது.
செவ்வாய்க்கிழமை பிற்பகல் வாக்கில் அச்சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.
27 வயது அந்த இந்திய ஆடவன் போதைப்பொருள் உட்பட குற்றச்செயல்கள் தொடர்பில் 8 குற்றப்பதிவுகளைக் கொண்டுள்ளான்.
169 செண்டி மீட்டர் உயரமும் 70 கிலோ எடையும் கொண்ட அந்நபரை போலீஸ் தீவிரமாகத் தேடி வருகிறது.
Crown என்ற முத்திரையை நெஞ்சில் பச்சைக் குத்தியுள்ள அவ்வாடவனைக் கண்டாலோ, அவனிருக்குமிடம் தெரிந்தாலோ சுங்கை பூலோ போலீசை தொடர்புகொள்ளுமாறு பொது மக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.