கோலாலம்பூர், செப்டம்பர் 26 – அனைத்துலக புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு சுபாங் ஜெயா மருத்துவமனையில் மலேசியக் குழந்தைகள் புற்றுநோய் சங்கம் கடந்த செப்டம்பர் 7ஆம் திகதி நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடுச் செய்திருந்தது.
கிள்ளான் வட்டாரத்தில் குழந்தைகள் புற்றுநோய் சங்கத்தால் உதவிகள் வழங்கப்பட்டு வரும் புற்றுநோய் குழந்தைகளும், மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வரும் குழந்தைகளுக்கும் இந்த நிகழ்ச்சி ஏற்பாடுச் செய்யப்பட்டதாக அச்சங்கத்தின் தோற்றுநர் லாவண்யா கணபதி வணக்கம் மலேசியாவிடம் தெரிவித்தார்.
குழந்தைகளுக்கான புற்றுநோய் தொடர்புடைய சிகிச்சைகளில் பணச் சுமை எதிர்நோக்கும் பெற்றோர்களுக்கு, CCAM எனப்படும் மலேசியா குழந்தைகள் புற்றுநோய் சங்கம், நிதி திரட்டி உதவி வருகிறது.
அவ்வகையில், தங்களது சங்கத்தின் இருப்பை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் எனும் நோக்கிலும், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளைப் பெற்றோர்கள் எவ்வாறு கவனிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை உருவாக்கும் நோக்கிலும் இதுபோன்ற நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து செய்து வருவதாக அவர் கூறினார்.