
ஜகார்த்தா, ஜூலை-21- சுலாவேசி தீவில் இந்தோனேசிய ஃபெரி கப்பல் தீப்பிடித்த சம்பவத்தில் ஐவர் உயிரிழந்த வேளை, 200-க்கும் மேற்பட்டோர் காப்பாற்றப்பட்டனர். நேற்று வட சுலாவேசி தலைநகர் மனாடோ (Manado) செல்லும் வழியில் அக்கப்பல் தீப்பிடித்தது.
ஃபெரியின் பின்பகுதியிலிருந்து தீ பரவத் தொடங்கியதாக, இந்தோனேசியக் கடலோர பாதுகாப்புத் துறை கூறியது.
பயணிகளில் பலர், உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக பாதுகாப்பு ஜேக்கேட்டுகளுடன் கடலில் குதித்தனர்.
மீனவர்களும் மீட்புப் பணிக்கு உதவி, பயணிகளை அருகிலுள்ள தீவுக்கு அழைத்துச் சென்றனர்.
கரும்புகையை வெளியாக்கிக் கொண்டிருந்த ஃபெரியை நோக்கி Bakamla எனும் கப்பல் தண்ணீரைப் பாய்ச்சி தீயை அணைக்கும் காட்சிகள் அடங்கிய வீயோக்களும் வைரலாகின.
இந்நிலையில் மரணமடைந்த ஐவரின் இருவரது உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.284 பேர் காப்பாற்றப்பட்டனர்.
என்றாலும் சம்பவத்தின் போது ஃபெரியில் இருந்த மொத்த பயணிகள் மற்றும் பணியாளர்களின் எண்ணிக்கைக் குறித்து தெரிவிக்கப்படவில்லை. தீ ஏற்பட்டதற்கான காரணமும் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.