
சென்னை, மார்ச்-14 – தமிழகம், சென்னையில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவத்தில், ஆட்டோவில் இருந்தவாறே பெண்ணின் மீது சிறுநீர் கழித்த ஆடவரை பொது மக்கள் அடித்தே கொன்றனர்.
புதன்கிழமை பிரோட்வே, பிரகாசம் சாலையில், 30 வயது கலைச்செல்வன், ஆட்டோவில் பயணம் செய்யும்போது, மதுபோதையில் இருந்துள்ளார்.
அப்போது அவ்வழியாக நடந்துசென்ற ஒரு பெண்ணின் மீது அவர் திடீரென சிறுநீர் கழித்ததால், பொது மக்கள் கடும் கோபம் அடைந்தனர்.
கூட்டம் கூடி தாக்கியதில் கலைச்செல்வன் படுகாயமடைந்து, பின்னர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
அவருடன் போதையிலிருந்த நண்பரும் காயமடைந்து சிகிச்சைப் பெற்று வருகிறார்.
மகனை அடித்தே கொன்ற குற்றவாளிகளை கைதுச் செய்யும் வரை உடலைப் பெறமாட்டோம் என கலைச்செல்வனின் குடும்பத்தார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து போலீஸார் CCTV காட்சிகளை ஆய்வு செய்து சந்தேக நபர்களைத் தேடி வருகின்றனர்.



