Latestமலேசியா

சேராஸ் பெர்டானாவில் பயணப் பெட்டியில் ஆடவரின் சடலம் கண்டுப்பிடிப்பு

கோலாலம்பூர், டிச 10 – Bandar Tun Hussein Onn , cheras Perdana குடியிருப்பு பகுதியில் பயணப் பெட்டி ஒன்றில் துர்நாற்றம் வீசிய நிலையில் ஆடவரின் சடலம் ஒன்று கண்டுப்பிடிக்கப்பட்டது.

எனினும் அந்த சடலத்தின் அடையாளம் இன்னும் கண்டறியப்படவில்லையென காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் நஸ்ரோன் அப்துல் யூசோப் ( Naazron Abdul Yusof ) தெரிவித்தார்.

காலை மணி 11.45 அளவில் மோசமான துர்நாற்றம் வீசியதை தொடர்ந்து பொதுமக்களில் ஒருவர் இதுகுறித்து போலீசிற்கு தகவல் கொடுத்தார்.

சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு மோப்ப நாய் பிரிவுடன் போலீஸ் தடயயியல் குழுவினர் வந்ததோடு அங்கு காணப்பட்ட நீல நிற பயணப் பெட்டியில் ஆடவரின் சடலம் இருப்பதை கண்டதாக இன்று வெளியிட்ட அறிக்கையில் நஸ்ரோன் தெரிவித்தார்.

சவப் பரிசோதனைக்காக அந்த சடலம் செர்டாங் (Serdang ) மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டதோடு இந்த விவகாரம் தொடர்பில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!