Latestமலேசியா

சையன் ரயன் பெற்றோர் மீதான கவனக்குறைவுக் குற்றச்சாட்டு பலவீனமானதல்ல – நீதிபதி தீர்ப்பு

பெட்டாலிங் ஜெயா, பிப்ரவரி-3 – ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட சிறுவன் Zayn Rayyan Abdul Matiin-னைப் வளர்த்ததில் அலட்சியம் காட்டியதாக, தங்கள் மீது கொண்டு வரப்பட்டுள்ள குற்றச்சாட்டு பலவீனமானது எனக் கூறி அவனது பெற்றோர் முன்வைத்த ஆட்சேபம் நிராகரிக்கப்பட்டுள்ளது.

மகனின் படுகொலையில் தாங்கள் என்ன தவறு செய்தோம் என்பது குற்றச்சாட்டில் விளக்கப்படவில்லை; எனவே அதனை நிராகரிக்க வேண்டுமென அத்தம்பதியர் நீதிமன்றத்திடம் கோரியிருந்தனர்.

எனினும், குற்றச்சாட்டில் எந்தக் குறைகளும் இல்லை; அனைத்தும் குற்றவியல் நடைமுறை சட்டப் பிரிவுகளைப் பின்பற்றியே இருப்பதாக, பெட்டாலிங் ஜெயா செஷன்ஸ் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.

தற்காப்பு வாதம் புரிய முடியாத அளவுக்கு குற்றச்சாட்டு அப்படியொன்றும் அத்தம்பதிக்கு பாதகமாக இல்லையென நீதிபதி சுட்டிக் காட்டினார்.

எனவே, இன்று பிற்பகல் 2 மணிக்கே அவ்வழக்கின் விசாரணைத் தொடங்கலாம் என்றார் அவர்.

Zayn Rayyan-னுக்கு உடல் ரீதியாக காயம் ஏற்படக்கூடிய அளவுக்கு, அவனைப் பாதுகாப்பதில் அலட்சியம் காட்டியதாகக் கொண்டு வரப்பட்ட குற்றச்சாட்டை, கடந்தாண்டு ஜூன் 13-ஆம் தேதி Zaim Ikhwan Zahari-யும் அவரின் மனைவி Ismanira Abdul Manaf-பும் மறுத்து விசாரணைக் கோரினர்.

இந்நிலையில், தங்களுக்கு எதிரான அக்குற்றச்சாட்டு பலவீனமாக இருப்பதாக அறிவித்து, தங்களை வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டுமென, ஜனவரி 21-ஆம் தேதி அவர்கள் நீதிமன்றத்திடம் விண்ணப்பித்திருந்தனர்.

2023, டிசம்பர் 5-ஆம் தேதி காணாமல் போன Zayn Rayyan, மறுநாள் டாமான்சாரா டாமாயில் உள்ள இடாமான் அடுக்குமாடி குடியிருப்பு அருகே கால்வாயில் சடலமாக மீட்கப்பட்டான்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!