
ஜகார்த்தா, நவம்பர்-7
இந்தோனேசியத் தலைநகர் ஜகார்த்தாவில் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள ஒரு மசூதியில் ஏற்பட்ட வெடிப்பில், 54 பேர் காயமடைந்துள்ளனர்.
வெள்ளிக் கிழமை தொழுகை நேரத்தின் போது ஏற்பட்ட அவ்வெடிப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு வெடிப்பு மசூதியினுள்ளும் மற்றொன்று வெளியிலும் ஏற்பட்டதில், தொழுகைக்கு வந்திருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர்.
இதனால் அவ்விடமே கலவரமானதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மீட்பு குழுக்கள் விரைந்துசெயல்பட்டு, காயமடைந்தவர்களை அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டுச் சென்றன.
இதுவரை உயிர் சேதும் எதுவும் அறிவிக்கப்படவில்லை.
இது விபத்தா அல்லது திட்டமிட்ட தாக்குதலா என்பதும் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
விசாரணைகள் நடைபெறுவதால் அதிகாரிகள் அமைதியை பேணுமாறு பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.



